News November 22, 2024

ஒசூர் அருகே ஒருவர் கொலை; இரு மாநில போலீசார் விசாரணை

image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கா்நாடக மாநில எல்லைப் பகுதியில் உள்ள பல்லூஜா கிராமத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்து உடலை கைப்பற்றிய அத்திப்பள்ளி போலீசார், பிரேத பரிசோதனைக்காக அத்திப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், உயிரிழந்தவர் சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சியை சேர்ந்த அழகுராஜ் என தெரிய வந்துள்ளது.மேலும், இரு மாநில போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 15, 2025

கிருஷ்ணகிரி: மக்கள் குறைதீர்வு கூடத்தில் 531 மனுக்கள்!

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று (டிச-15) ஆட்சித்தலைவர் தினேஷ்குமார், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம், பல்வேறு கோரிக்கைகள் குறித்து 531 மனுக்கள் பெறப்பட்டன. பின் மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர், துறை சார்ந்த அலுவலர்களிடம் கொடுத்து மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு உரிய தர வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

News December 15, 2025

கிருஷ்ணகிரியில் வாகன ஏலம் அறிவிப்பு!

image

கிருஷ்ணகிரி காவல்துறை சார்பில் வாகன ஏலம் அறிவிக்கப்பட்டது. மதுவிலக்கு அமல்பிரிவில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்த 73 வாகனங்கள், வரும் (டிச.23) காலை 10 மணியளவில் ஒசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. மேலும், ஏலத்திற்கு வருவோர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. வாகனம் வாங்க விரும்புபவர்களுக்கு ஷேர்!

News December 15, 2025

கிருஷ்ணகிரி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

image

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <>க்ளிக் <<>>செய்து அப்ளை பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்க… புதுமணதம்பதிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!