News April 2, 2024
ஒகேனக்கல்: யானை மிதித்து முதியவர் பலி

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் மாதையன்(60). நேற்று(ஏப்.1) இவர் பெரியபள்ளம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒற்றை யானை திடீரென தாக்கியதில், அங்கேயே படுகாயம் அடைந்து மாதையன் உயிரிழந்துள்ளார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த ஒகேனக்கல் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 15, 2025
தர்மபுரி ஹோட்டலில் சாப்பிடுவோர் கவனத்திற்கு

தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஒரே நாளில் 100 இடங்களில் ஆய்வு செய்தனர். இதில் பழைய சிக்கன், நூடுல்ஸ், செயற்கை நிறமூட்டிகள், பலமுறை பயன்படுத்திய எண்ணெய்யை உபயோக படுத்திய கடைகளுக்கு ரூ.17,000 அபராதம் விதித்தனர். மேலும், பொதுமக்கள் உணவு தொடர்பாக 9444042322 என்ற எண்ணிலோ அல்லது <
News August 15, 2025
கிருஷ்ணகிரியில் தலைமை ஆசிரியருக்கு விருது

கிருஷ்ணகிரி சுதந்திர தின விழாவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பொதுதேர்வில் 100% தேர்ச்சி பெற்றுத்தந்த தலைமையாசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் பட்டம் வழங்கப்பட்டது. இதன்படி பையர்நத்தத்தை சார்ந்த தலைமை ஆசிரியர் குபேந்திரனுக்கு சிறந்த ஆசிரியர் பட்டம் வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து, பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
News August 15, 2025
தருமபுரி: இலவச பயிற்சி மூலம் ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்

தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் சுமார் 4000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் இங்கே <