News August 19, 2025
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,15,000 கன அடி தண்ணீர் வரத்து

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (19.08.2025) காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 1,15,000 கன அடியாக தண்ணீர் வரத்து கடந்த சில நாட்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டாவது நாளாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
தருமபுரியில் செவிலியர் வேலை- APPLY HERE

தருமபுரி பெண்களே, குமுதா மருத்துவமனையில் செவிலியர் (staff nurse) பணிக்கான காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. Bsc.Nursing முடித்த, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.10,000 – ரூ.12,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், <
News November 14, 2025
தருமபுரி: இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

தருமபுரி மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04342-260042) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்!
News November 14, 2025
தருமபுரி: ரயில் சேவையில் மாற்றம்!

தருமபுரி மார்க்கத்தில் தண்டவாள பணிகள் நடைபெறுவதால் நவ.16ம் தேதி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி, பெங்களூர்-எர்ணாகுளம் ரயில் தருமபுரி வழியாக செல்லாமல், திருப்பத்தூர் வழியாக சேலம் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூர்-காரைக்கால் (16529) ரயில், பையனப்பள்ளி வழியாக சேலம் செல்லும். பெங்களூர்-கோவை வந்தே பாரத் ரயில் திருப்பத்தூர் வழியாக சேலம் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


