News August 20, 2025
ஒகேனக்கல் ஆற்றில் 1,45,000 கன அடி தண்ணீர் வத்து

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1,45,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்கு நேற்று இரண்டாவது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 14, 2026
தருமபுரியில் அதிர்ச்சி!

தர்மபுரி அருகே கோவிலூர் ஓம்சக்தி கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலி திருடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூசாரி குமரன் பூஜையை முடித்துச் சென்றபின், மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் ஊழியர்கள் வந்து பார்த்தபோது தாலி காணாமல் போனது தெரிந்தது. புகாரின் பேரில் மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
News February 14, 2026
தருமபுரி: பிஞ்சி உயிர் துடிதுடித்து பலி!

இண்டூர் அருகே சந்தாரப்பட்டியைச் சேர்ந்த சதீஷ் – மாரியம்மாள் தம்பதிக்கு 3வது பெண் குழந்தை பிறந்தது. தனியார் மருத்துவமனையில் பிறந்து வீடு திரும்பிய குழந்தைக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாகத் தருமபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News February 14, 2026
தருமபுரியில் 3வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!

தருமபுரி அருகே எழிலரசி என்பவரின் 3 வயது பெண் குழந்தையை, அவரது 2வது கணவர் அய்யப்பன் (27) சித்ரவதை செய்துள்ளார். தங்களின் தனிமைக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, குழந்தையின் உடல் முழுவதும் தீயால் சூடு வைத்துள்ளார். இதில் காயமடைந்த குழந்தை தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் பாட்டி ரமணி அளித்த புகாரின் பேரில், டவுன் போலீசார் விசாரணை நடத்தி அய்யப்பனைக் கைது செய்தனர்.


