News August 24, 2025

ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி

image

ஒகேனக்கலில் சில நாட்களாக விநாடிக்கு ஒரு லட்சத்துக்கும் மேல் நீா்வரத்து இருந்ததால் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று காலை 9500 கனஅடியாக குறைந்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் சுற்றுலாப் பயணிகளுக்கு தருமபுரி மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.

Similar News

News August 24, 2025

தர்மபுரி: ரேஷன் கார்டுதாரர்கள் இத நோட் பண்ணிக்கோங்க

image

தர்மபுரி மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News August 24, 2025

தர்மபுரி: மாணவிக்கு பாலியல் தொல்லை; முதல்வர் கைது

image

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் உள்ள தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து வரும் வினுலோகேஸ்வரன், அதே பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக மாணவி பெற்றோரிடம் கூற, பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வினுலோகேஸ்வரனை போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News August 24, 2025

டிராக்டரில் சென்றவர் உயிரிழப்பு

image

காரிமங்கலம் அடுத்த திப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னசாமி திப்பம்பட்டி சாலையில் டிராக்டரில் தண்ணீர் கொண்டு சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில், சம்பவ இடத்திலேயே சின்னசாமி உயிரிழந்தார். இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!