News January 18, 2026
ஐரோப்பிய நாடுகளுக்கு 10% வரி விதித்த டிரம்ப்!

இங்கி., பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் மீது 10% வரி விதிக்க உள்ளதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். டென்மார்க் & ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பல ஆண்டுகளாக எந்த வரியையும் விதிக்கவில்லை என்றும், இந்நிலையில் கிரீன்லாந்தை கைப்பற்றும் ஒப்பந்தம் எட்டப்படும் வரை வரும் பிப்.1 முதல் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 10% வரி விதிக்கப்படும் என கூறியுள்ளார்.
Similar News
News February 15, 2026
12 ஜோதிர்லிங்க திருத்தலங்கள் இவை தான்.!

ஜோதிர்லிங்கம் என்பது சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்று. இது ஒளிமயமான லிங்கம் என்பதால் ஜோதிர்லிங்கம் எனப்படுகிறது. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை ஜோதிர்லிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக நம்பப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 12 ஜோதிர்லிங்க தலங்கள் உள்ளன. அவற்றை உங்களுக்காக கொண்டுவந்துள்ளோம். போட்டோவை இடது புறமாக Swipe செய்து பார்க்கவும். SHARE IT.
News February 15, 2026
தங்க நகைகள் ஏற்றுமதி வரலாறு காணாத சரிவு!

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு தங்க ஆபரணங்கள், ரத்தினங்கள் ஏற்றுமதி கடும் சரிவை கண்டுள்ளது. இது தொடர்பாக GJEPC வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025 ஜனவரியில் USA, UAE, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ₹2,15,000 கோடியாக இருந்த நகைகள் ஏற்றுமதி, கடந்த மாதம் ₹2,03,000 கோடியாக (5.79%) சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதேநேரம், உள்நாட்டில் தங்க நகைகள் விற்பனையை விட காயின், பார்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
News February 15, 2026
ஒரு சதவீத ஓட்டு கூட விஜய்க்கு கிடையாது: L முருகன்

விஜய் தனக்கு 30% வாக்கு இருப்பதாக கூறுவதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? என L முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய்க்கு இத்தனை சதவீதம் வாக்கு கிடைக்கும் என்பதற்கு எந்த சர்வேவும் கிடையாது என கூறிய அவர், விஜய் ஒரு சதவீதம் ஓட்டு வாங்குவாரா என்று பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். பாஜகவை பார்த்து ஒழுக்கம் கட்டுப்பாட்டை புதிய கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் விஜய்யை சாடியுள்ளார்.


