News November 24, 2024
ஐயப்ப பக்தர்களுக்கு தேனி ஆட்சியர் வேண்டுகோள்

தேனி மாவட்டம், குமுளி மலைப்பாதை வழியாக பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் சென்று வருகின்றனர். அவ்வப்போது மலை சாலையில் வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்லக்கூடிய பக்தர்கள் குமுளி மலைப்பாதையில் இரவு பயணத்தை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News November 3, 2025
தேனி: தாய் இறந்த சோகத்தில் இளைஞர் தற்கொலை

கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் குமரன் (16). இவரது தாயார் ஜெயா கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அன்று முதல் குமரன் மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தூங்கச் சென்ற குமரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 2, 2025
தேனி: சாக்கு தைக்கும் தொழிலாளி தற்கொலை

தேனி அல்லிநகரம் தெலுங்கு பஜார் தெருவைச் சார்ந்தவர் குமரேசன். சாக்கு தைக்கும் தொழிலாளி கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
News November 2, 2025
தேனி: அனைத்து சேவைகளுக்கும் இந்த ஒரு லிங்க் போதும்.!

தேனி மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <


