News November 14, 2025

ஐபிஎல் வீரர்கள் ஏலம்.. எப்போது தெரியுமா?

image

2026 IPL சீசனுக்கான வீரர்கள் ஏலம், வரும் டிச.16-ம் தேதி அபுதாபியில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை மினி ஏலம் என்பதால், ஒரே நாளில் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. தக்கவைத்த வீரர்களின் விவரம் இன்னும் 2 நாள்களில் வெளியான பிறகு, ஏலத்தில் பங்கேற்க வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம். வீரர்கள் விடுவிப்பு தொகையுடன் கூடுதலாக ₹5 கோடி வரை ஒவ்வொரு அணியும் ஏலத்தில் செலவு செய்யலாம்.

Similar News

News April 2, 2026

BREAKING: குவாரி முறைகேடு வழக்கில் பொன்முடி விடுதலை

image

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் பொன்முடி, அவரது மகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்து விழுப்புரம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண்ணை வெட்டி எடுத்து, அரசுக்கு ₹28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அவர்கள் மீது 14 ஆண்டுகளுக்கு முன் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், வழக்கில் போதிய சாட்சிகள் இல்லை எனக்கூறி அனைவரையும் கோர்ட் விடுவித்துள்ளது.

News April 2, 2026

₹1,000 கோடி ஊழல்.. நேருவை விமர்சித்த விஜய்

image

திருச்சி பிரசாரத்தில், அமைச்சர் KN நேருவை விஜய் மறைமுகமாக விமர்சித்தார். இங்கு (திருச்சி) ஒரு அமைச்சர் உள்ளார். நகராட்சித் துறையில் வேலை வாங்கி தருவதாக ₹1,000 கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளார் என விமர்சித்தார். கல்லூரி உதவி பேராசிரியர் பணி 2,000 பேருக்கு வழங்கப்படும் என அறிவித்துவிட்டு வெறும் 5 பேருக்கு மட்டுமே வேலை வழங்கியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

News April 2, 2026

விடுமுறை.. 4 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

image

புனித வெள்ளி, வார விடுமுறையை முன்னிட்டு மக்கள் சிரமமின்றி ஊர்களுக்குச் செல்ல, இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. அதன்படி, ஞாயிறு வரை 4 நாள்களுக்கு சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து 2,257 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதுவரை 10,000-க்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். TNSTC செயலி (அ) <>இணையதளத்தில்<<>> உங்கள் டிக்கெட்டை புக் செய்யுங்கள்!

error: Content is protected !!