News December 11, 2025
ஐபிஎல் ஏலம்: ஜாக்பாட் அடிக்கப்போவது யார்?

வரும் 16-ம் தேதி ஐபிஎல் மினி ஏலம் அபுதாபியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஏலத்தின் முதல் செட்டில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. கான்வே, கேமரூன் கிரீன், சர்பராஸ் கான், டேவிட் மில்லர், பிரித்வி ஷா, ஜேக் பிரேஸர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதில், கேமரூன் கிரீன் அதிக தொகைக்கு ஏலம் போவார் என ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர். CSK யாரை வாங்கணும்? கமெண்ட்ல சொல்லுங்க
Similar News
News December 16, 2025
திருப்பத்தூர் காவல் துறையின் விழிப்புணர்வு செய்தி

திருப்பத்தூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் தினம் ஒரு விழிப்புணர்வு தகவல் பதிவிடப்படுகிறது. அவ்வாறு இன்று (டிச.16) குழந்தை திருமணத்தை எதிர்ப்போம் என்ற செய்தி பகிரப்பட்டுள்ளது. மேலும் குழந்தை திருமணம் பற்றிய புகார்கள் 1098 என்ற எண்ணின் மூலம் தெரிவிக்கலாம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
News December 16, 2025
தமிழ் நடிகைக்கு திருமணம் முடிந்தது ❤️❤️❤️

‘செல்லம்மா’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சுரேந்திரன். தற்போது ‘மகளே என் மருமகளே’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் தனது காதலரான ரோஹித் என்பவரை கரம் பிடித்துள்ளார். இந்த ஆண்டு ஜனவரியில் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தற்போது தான் திருமணம் முடிந்துள்ளது. இவர்களின் கியூட் போட்டோஸ் வைரலாகின்றன. சின்னத்திரை நடிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
News December 16, 2025
வங்கி கணக்கில் ₹2,000… தமிழக அரசு அப்டேட்

PM KISAN திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளாக தலா ₹2,000 வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த தவணை 2026 பிப்ரவரியில் டெபாசிட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இணைய விவசாய அடையாள எண்ணை பதிவு செய்யுமாறு விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆதார் அட்டை, நில உரிமை ஆவணங்களுடன் தோட்டக்கலைத் துறையில் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளது.


