News November 15, 2024
ஐநா உலக நீர் தர ஆலோசனைக்குழு

ஐக்கிய நாடுகள் சபையின் உலக நீர் தர கூட்டணியின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக புதுச்சேரி பல்கலை., பேராசிரியர் நந்திவர்மன் முத்து நியமிக்கப்பட்டுள்ளார். அந்தக் குழுவில் ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா,லத்தீன் அமெரிக்கா, அமெரிக்கா,லத்தீன் அமெரிக்கா, பசிபிக் நாடுகளைச் சேர்ந்த 12 உறுப்பினர்களுடன் இவர் இடம்பெற்றுள்ளார்.இவரது நியமனம் புதுச்சேரிக்கு பெருமை என துணை வேந்தர் தணிக்கரசு தெரிவித்துள்ளார்.
Similar News
News March 1, 2026
புதுச்சேரி மருத்துவத்திற்கு சிறந்த இடமாகும் – பிரதமர் மோடி பேச்சு

புதுச்சேரியில் பிரதமர் மோடி பேசியபோது, புதிய திட்டங்கள் மூலம் புதுச்சேரிக்கு சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என அனைத்தும் கிடைக்கும். மேலும் புதுச்சேரி என்பது சித்த மருத்துவத்திற்கு சிறந்த இடமான அறியப்படுகிறது. மக்கள் நலமாக இருந்தால் தான் ஒர நாட்டின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். புதுச்சேரியை சேர்ந்த யாரும் மருத்துவத்திற்காக பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டிய நிலை வரக்கூடாது என்றார்.
News March 1, 2026
புதுச்சேரிக்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன் – மோடி பேச்சு

புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக வந்த பிரதமர் நரேந்திர மோடி ரூ.1,571.73 கோடி மதிப்பிலான 74 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார், தொடர்ந்து ரூ.1,142.23 கோடி மதிப்பில் 19 முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் விழாவில் பேசிய பிரதமர் சித்தர்கள், துறவிகள், கவிஞர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி புதுச்சேரிக்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன் என்றார்.
News March 1, 2026
புதுச்சேரி: காங்கிரஸ்-திமுக ஆட்சிக்கு மோடி குற்றச்சாட்டு

புதுச்சேரி, காங்கிரஸ்-திமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்ததாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்ததுடன், அரசியல் நிலையற்ற தன்மையும் நிலவியதாக தெரிவித்தார். தற்போதைய ஆட்சி வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.


