News July 5, 2025
ஐடி நிறுவன ஊழியர் வீட்டில் 6 பவுன் நகை திருட்டு

சிதம்பரம் அடுத்த சி.கொத்தங்குடியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (37). சென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ராஜேஷின் வீட்டில் நேற்று மர்மநபர்கள் முன்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றுள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்த 6 பவுன் நகை, 1 கிலோ வெள்ளிப் பொருட்களை திருடிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து சிதம்பரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 5, 2025
கடலூர் துறைமுகத்தை இயக்க ஒப்பந்தம்

கடலூர் துறைமுகம் 111 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த துறைமுகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு உரங்கள், நிலக்கரி ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன. இதையடுத்து பல்வேறு காரணங்களால் துறைமுகத்தின் செயல்பாடு முடங்கியது. இந்நிலையில் கடலூர் துறைமுகத்தை மீண்டும் இயக்குவதற்காக தனியார் நிறுவனத்துடன் தமிழ்நாடு கடல்சார் வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
News July 5, 2025
கடலூர்: 12th போதும், ரூ.81,000 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 3131 Data Entry Operator (DEO) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறைந்தது 12-ஆம் வகுப்பு முடித்த, 18 முதல் 27 வயதுக்குட்பட்ட நபர்கள் <
News July 5, 2025
கடலூர்: மனை வைத்திருப்பவர்கள் கவனிக்க

கடலூர் மக்களே அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், (ஜூலை 1) முதல் அவற்றை வரன்முறை செய்ய விண்ணப்பிக்க தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் <