News August 7, 2025
ஐடிஐ-யில் நேரடி சேர்க்கை; கால அவகாசம் நீட்டிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம், கோட்டூர், வண்டாம்பாளை ஆகிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் 2025 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை வரும் ஆக.31 தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.
Similar News
News December 11, 2025
திருவாரூர்: BE படித்தவர்களுக்கு அரசு வேலை

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள திட்ட பொறியாளர், டெக்னிக்கல் நிபுணர் உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 33 (அதிகபட்சம்)
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.55.000
5. கல்வித்தகுதி: BE
6. நேர்காணல் நடைபெறும் நாள்: 16.12.2025
7. மேலும் தகவலுக்கு: <
மற்றவர்களும் பயன்பெற இதனை ஷேர் பண்ணுங்க….
News December 11, 2025
திருவாரூர்: 300 கிலோ குட்கா பறிமுதல்

எரவாஞ்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி, அவரிடம் இருந்த மூட்டைகளை சோதனை செய்த போது அதில் 10கி புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்ததில் அவர் கும்பகோணத்தைச் சேர்ந்த தலபத்குமார்(31) என்பதும், அவர் மேலும் 300கி குட்கா பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்து, குட்காவை பறிமுதல் செய்தனர்.
News December 11, 2025
திருவாரூர்: அரசு பள்ளி மாணவர் மாநிலத்தில் முதலிடம்

மாநில அளவிலான கலைத்திருவிழா புதுக்கோட்டையில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் கீ போர்டு வாசித்தல் போட்டியில் திருவாரூர் மாவட்டம், பேரளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் ஜெரிஸ் என்ற மாணவர் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பெற்றார். இதையடுத்து பள்ளிக்கு வருகை தந்த வெற்றி பெற்ற மாணவருக்கு, பள்ளியில் சால்வை அணிவித்து வாழ்த்தி, பாராட்டு தெரிவித்தனர். ஜெரிஸை நீங்களும் வாழ்த்தலாமே!


