News April 13, 2025

ஐடிஐ முடித்திருந்தால் போதும் ரயில்வேயில் வேலை

image

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு 11/05/2025 வரை ஆன்லைன் வழியாக இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு- குறைந்தபட்சம் 18 முதல் அதிகபடியாக 30 வயது வரை. கல்வித்தகுதி – 10ஆம் வகுப்பு, ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பொறியியல் டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News April 15, 2025

பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

image

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.இந்த நிலையில் மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

News April 15, 2025

காஞ்சிபுரம் இட்லியின் சிறப்பு தெரியுமா?

image

மற்ற இட்லியை விட காஞ்சிபுரம் இட்லி முற்றிலும் வித்தியாசமானது. பல்லவர்கள் காலத்திலிருந்தே காஞ்சிபுரம் கோயில்களில் வழங்கப்பட்ட இந்த இட்லியின் சிறப்பம்சம் இதில் சேர்க்கப்படும் பொருள்களும் அதன் தயாரிப்பு முறையும் தான். நீளமான உருளை வடிவ மூங்கில் அச்சினுள் மந்தாரை இலையைப் பரப்பி, அரிசி, உளுந்து, சீரகம், வெந்தயம், மிளகு போன்ற பொருள்கள் சேர்த்து அரைக்கப்பட்ட மாவை ஊற்றி, வேகவைப்பது தான் காஞ்சிபுரம் இட்லி.

News April 14, 2025

சமத்துவ நாள் விழாவில் ரூ24.80 கோடி நலத்திட்ட உதவிகள்

image

இன்று (14-4-25)காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான சமத்துவ நாள் விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி 1181 ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பயனாளிகளுக்கு 24.80 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் உடன் இருந்தார்.

error: Content is protected !!