News December 31, 2025
ஏ டி எஸ் பி தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று ( டிசம்பர்31) வாராந்திர பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News February 2, 2026
வேலூர்: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

வேலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
News February 2, 2026
வேலூர்: காதலி முன் உடல் கருகி பலி!

காட்பாடி தாலுகா காசிகுட்டையை சேர்ந்தவர் தருண் (20). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை பள்ளி பருவம் முதல் காதலித்து வந்தார். இது குறித்து பெண்ணின் வீட்டார் தருணை கண்டித்ததால் காதலியின் வீட்டுக்கு முன் தீக்குளித்தார். அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தருண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து லத்தேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 2, 2026
வேலூர்: தூக்கில் தொங்கிய பள்ளி மாணவி!

பேரணாம்பட்டு டவுன் ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் ஜோதி. இவரின் மூத்த மகள் சுவாதி (17) அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று (பிப்.1) மதியம் ஜோதி தனது மகள் சுவாதியை வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் இருக்கிறாயே எனக்கூறி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி சுவாதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


