News November 22, 2025
ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்துக்கு இதுதான் காரணமா?

எங்கு போனாலும் ரசிகர்களால் பிரைவசி இல்லை என்பதால் அதன் தாக்கம் குடும்பத்தின் மேல் விழுந்துள்ளதாக ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுடன் தனிப்பட்ட நேரத்தை செலவிடமுடியாமல் இருந்ததாக கூறிய அவர், குடும்பமாக ஒன்று கூடுவதும், ஒரே டேபிளில் உட்கார்ந்து உணவருந்துவதும் மிகக் குறைவு என கூறிவுள்ளார். இந்நிலையில், இதனால்தான் அவருக்கு விவாகரத்து ஆனதா என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.
Similar News
News January 30, 2026
திருப்பதி லட்டு கலப்படம்: ₹250 கோடிக்கு ஊழல்!

திருப்பதி லட்டு நெய் கலப்பட வழக்கில், 36 பேர் மீது CBI குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 2021–24 காலகட்டத்தில், 68 லட்சம் கிலோ போலி நெய்யை விநியோகம் செய்து, ₹250 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பால், எண்ணெய்யை பயன்படுத்தாமல் பாமாயில் போன்றவற்றை பயன்படுத்தி போலி நெய் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், 9 TTD அதிகாரிகள் & 5 பால் துறை நிபுணர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
News January 30, 2026
வெள்ளி இன்று கிலோவுக்கு ₹10,000 விலை குறைந்தது

ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த <<18999179>>தங்கம்<<>>, வெள்ளி விலை இன்று(ஜன.30) பெரும் அளவில் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ₹10 குறைந்து ₹415-க்கும், கிலோவுக்கு ₹10,000 குறைந்து ₹4,15,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 1 அவுன்ஸ்(28g) 2% விலை வீழ்ச்சியடைந்ததே இந்திய சந்தையில் வெள்ளி விலை குறைய காரணமாகும்.
News January 30, 2026
லோன் வாங்கியவர்களுக்கு HAPPY NEWS!

பிப்.6-ல் நடக்கவிருக்கும் ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், வீட்டு கடன்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு, ஹோம் லோனின் வட்டி 9% ஆக இருந்தால், அது 8.75% ஆகக் குறையலாம் என நிபுணர்கள் சொல்கின்றனர். நீங்கள் வீட்டு கடன் வாங்கியிருக்கீங்களா?


