News October 24, 2024

ஏழைகள் சாமி கும்பிட கூடாதா என உயர் நீதிமன்றம் கேள்வி

image

திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி கட்டணம் வசூலிப்பதற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கோயிலில் சாமி தரிசனத்துக்கு ரூ.1,000, 2,000 வாங்கினால் ஏழைகள் எப்படி தரிசனம் செய்வார்கள்?.ஏழைகள் சாமி கும்பிடக்கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோயிலா? என கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இதில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தூத்துக்குடி ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

Similar News

News December 18, 2025

தூத்துக்குடிக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

image

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இரட்டை இரயில் பாதை சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் டிச.20 தேதி முதல் 23ஆம் தேதி வரை தூத்துக்குடி வரும் அனைத்து ரயில்களும் மணியாச்சி ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கோவில்பட்டி, மணியாச்சியில் இருந்து இந்த நாட்களில் தூத்துக்குடிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

News December 18, 2025

தூத்துக்குடி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

தூத்துக்குடி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 18, 2025

தூத்துக்குடி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. 7 ஆண்டுகள் சிறை

image

காயல்பட்டினத்தை சேர்ந்தவர் கெவின். இவர் கடந்த ஆண்டு தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் இவரை கைது செய்தனர். தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி கெவினுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!