News December 11, 2025
ஏலம் விடப்படும் வாகனங்கள் – கிருஷ்ணகிரி போலீஸ் அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதுவிலக்கு-அமலாக்க பிரிவின் நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட 56 இருசக்கர வாகனங்கள், 1 மூன்றுசக்கர வாகனம் மற்றும் 16 நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட 73 வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளன. 09.12.2025 முதல் 23.12.2025 வரை காலை 10 மணிக்கு கோரும் நகர் காவல்துறையில் பார்வைக்கு வைக்கப்படும். முன் பதிவு டோக்கன் கட்டணம் இருசக்கரத்திற்கு ₹1000, நான்கு சக்கரத்திற்கு ₹5000 வசூலிக்கப்படும்.
Similar News
News December 14, 2025
கிருஷ்ணகிரி: மத்திய அரசு வேலை..ரூ.1,12,400 வரை சம்பளம்!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிஆர்டிஓ-வில் 764 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வி தகுதி ஐடிஐ, டிப்ளமோ, பிஎஸ்சி, இன்ஜினியர் முடித்திருந்தால் போதும், ரூ.19,900 முதல் ரூ.1,12,400 வரை சம்பளமாக வழங்கப்படும். 18-28 வயதுடையவர்கள் (ம) மாற்றுத்திறனாளிகளுக்கு 38 வயது வரை விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் ஜன.01 உடனடியாக இந்த <
News December 14, 2025
கிருஷ்ணகிரி: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.
News December 14, 2025
கிருஷ்ணகிரி: மின்கம்பத்தில் மோதி வாலிபர் பலி!

கிருஷ்ணகிரியில் வினித், கோபி & ராஜ்குமார் ஆகிய மூவரும் காவேரிப்பட்டணம் அருகே கால்வேஹள்ளி ஊரில் தன் நண்பரின் பிறந்தநாளை கொண்டாடி விட்டு இன்று (டிச.14) அதிகாலை வீடு திருப்பினர். அப்போது கால்வேஹள்ளி அருகே பைக்கில் அதிவேகமாக சென்றதால், நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி வினித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின், மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


