News April 20, 2025
ஏலக்காய் மாலை அணிவித்த தேனி மாவட்ட தலைவர்

திண்டுக்கல்லில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெருங்கோட்ட அளவிலான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட பாஜக தலைவர் P.இராஜபாண்டியன் கலந்து கொண்டு மாநில தலைவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பேராசிரியர் இராம ஶ்ரீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Similar News
News November 3, 2025
ஆண்டிபட்டியில் இளம்பெண் தற்கொலை

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் தேவி (35). இவருக்கு கடந்த ஐந்து வருடங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலனளிக்காத காரணத்தினால் தேவி வலியின் வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வயிற்று வலியின் வேதனை தாங்காமல் தேவி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
News November 3, 2025
தேனி: தாய் இறந்த சோகத்தில் இளைஞர் தற்கொலை

கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் குமரன் (16). இவரது தாயார் ஜெயா கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அன்று முதல் குமரன் மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தூங்கச் சென்ற குமரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 2, 2025
தேனி: சாக்கு தைக்கும் தொழிலாளி தற்கொலை

தேனி அல்லிநகரம் தெலுங்கு பஜார் தெருவைச் சார்ந்தவர் குமரேசன். சாக்கு தைக்கும் தொழிலாளி கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.


