News April 1, 2026

ஏற்றத்துடன் முடிவடைந்த சந்தை.. முதலீட்டாளர்கள் குஷி

image

இந்தியப் பங்குச் சந்தைகள் புதிய நிதியாண்டின் முதல் நாளில் ஏற்றத்துடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 1,600 புள்ளிகளும், நிஃப்டி 500 புள்ளிகளும் உயர்ந்தன. சந்தை தொடங்கிய ஒரே மணி நேரத்திலேயே முதலீட்டாளர்கள் ₹13 லட்சம் கோடி வரை லாபம் ஈட்டினர். இதனால், மொத்த BSE சென்செக்ஸ் சந்தை மூலதனம் ₹4,12,41,172.45-லிருந்து ₹4,25,18,811 ஆக உயர்ந்தது.

Similar News

News April 13, 2026

விஜய்யும், சீமானும் பாஜகவின் பி-டீம்: துரை வைகோ

image

அதிமுக கூட்டணியில் அனைத்து முடிவுகளையும் பாஜகதான் எடுப்பதாக துரை வைகோ விமர்சித்துள்ளார். ஜெயலலிதா வழி நடத்திய இயக்கமான அதிமுக இப்போது பாஜகவின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர்களின் கிளைக்கழகமாக அது மாறிவிட்டதாகவும் சாடினார். மேலும், இந்த தேர்தலில் பாஜவின் பி-டீமாக விஜய்யின் தவெகவும் சீமானின் நாதகவும் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

News April 13, 2026

போர்.. இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு

image

<<19633857>>ஹார்முஸ் நீரிணையை முற்றுகையிட<<>> அதிபர் டிரம்ப் அமெரிக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. நமது எண்ணெய், LPG கப்பல்களை ஈரான் அனுமதிப்பதால் தான் இதுவரை பெரிய பாதிப்பு இல்லாமல் சமாளித்து வருகிறோம். டிரம்ப் கூறியபடி அனைத்து கப்பல்களும் தடுக்கப்பட்டால் LPG, கச்சா எண்ணெய் பெறுவதில் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணிக்கின்றனர்.

News April 13, 2026

‘ஜன நாயகன்’ லீக்கானதற்கு L.முருகன் காரணம்: KAS

image

‘ஜன நாயகன்’ படம் லீக்கானதற்கு L.முருகன் காரணம் என செங்கோட்டையன் சாடியுள்ளார். பழனி பிரசாரத்தில் ‘ஜன நாயகன்’ லீக்கானதை சுட்டிக்காட்டிய அவர், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் யார் என்பதை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். வரும் தேர்தலில் L முருகன் தோற்கடிக்கப்பட வேண்டும் என பழனி முருகனை வேண்டுவதாகவும், அவரை தோற்கடித்து மீண்டும் டெல்லிக்கு அனுப்ப வேண்டிய கடமை நமக்கு உள்ளதாகவும் பேசியுள்ளார்.

error: Content is protected !!