News July 8, 2025
ஏற்காடு ரயிலை கடத்துவதாக மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

ஈரோடு-சென்னை சென்ட்ரல் இடையே தினசரி இயக்கப்படும் ஏற்காடு விரைவு ரயில், சேலம் மற்றும் காட்பாடி வழியாகச் செல்கிறது. இந்தநிலையில் நேற்று இரவு 9 மணிக்கு சென்னை தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மிரட்டல் அழைப்பு வந்தது. அதில் ஏற்காடு ரயிலை கடத்தப்போவதாக மிரட்டினார்.இதனையடுத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சபரீசன் என்பவர் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
Similar News
News July 8, 2025
சேலம் சரகத்தில் ரூ.20 கோடிக்கு மாம்பழம் விற்பனை

சேலம் சரகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் மாம்பழம் சீசன் முடியும் தருவாயில் உள்ளது. தற்போது கடைசி ரகமான நீலம் வகை மாம்பழம் விற்பனை நடைபெற்று வருகிறது. சேலம் சரகத்தில் மட்டும் நடப்பாண்டு சீசனில் சுமார் ரூபாய் 20 கோடி அளவுக்கு மாம்பழங்கள் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மாம்பழம் சீசன் 100 நாட்கள் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
News July 8, 2025
சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு

இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக, கோவை-தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் (03680) கோவை ரயில் நிலையத்தில் இருந்து இன்று (ஜூலை 08) காலை 07.50 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில் சுமார் 11.10 மணி நேரம் தாமதமாக இரவு 07.00 மணிக்கு புறப்படும். திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
News July 8, 2025
பெண்கள் சேவை மையத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

ஆத்தூர் சகி பெண்கள் சேவை மையத்தில் வேலைக்கு 8ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள நபர்கள் 15.07.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம். அறை எண் 126 என்ற முகவரிக்கு நேரிலோ, அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0427-2413213 அழைக்கவும் என கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.SHAREit