News April 15, 2025

ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழப்பு

image

பாசார் கிராமத்தில் உள்ள சித்தேரி ஏரியில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சிறுமிகள் குளிப்பதற்காக சென்றனர். இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஏரியில் குளித்துக் கொண்டிருந்த சிவசக்தி(11), ஸ்வேதா(12) ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது சம்பவம் தொடர்பாக ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறையில் குழந்தைகளை கண்காணியுங்கள் பெற்றோர்களே. 

Similar News

News April 28, 2025

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல் துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 27-ம் தேதி இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 27, 2025

ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

image

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க

News April 27, 2025

கள்ளக்குறிச்சியில் பார்க்க வேண்டிய 6 முக்கிய சிவன் கோயில்கள்

image

அசகளத்தூர் லோகபாலீஸ்வரர் கோயில்,
செல்லம்பட்டு விஸ்வநாதசுவாமி கோயில்,
பெருமங்கலம் சுந்தரேஸ்வரர் கோயில்,
மகரூர் கைலாசநாதர் கோயில்.
தண்டலை சுயம்புநாதீஸ்வரர் கோயில்.
ரிஷிவந்தியம் அர்த்த நாரீசுவரர் கோயில்.
இது தவிர வேறு கோயில்கள் இருந்தால் கமெண்ட் செய்து விட்டு மறக்காம ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!