News April 19, 2025

ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

image

திருவண்ணாமலை, கலசபாக்கம் அடுத்த தேவராயம் பாளையத்தை சேர்ந்தவர் ஐயப்பன் (8). பள்ளி விடுமுறை என்பதால் நேற்று (ஏப்ரல்.18) ஏரியில் குளிக்க சென்று நீரில் மூழ்கி உள்ளார். அந்த வழியாக சென்ற மக்கள் சிறுவனை மீட்டு ஆதமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 16, 2025

தி.மலை: ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக நேற்று (ஆக.15) முதல் இன்று(ஆக.16) காலை வரை இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News August 15, 2025

தி.மலை: ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஆக-15) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News August 15, 2025

தி.மலை: வாழ்வில் சிறக்க இங்கு போங்க

image

திருவண்ணாமலை மாவட்டம் எரிகுப்பம் பகுதியில் எந்திர சனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது, இந்த கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாகும், பொதுவாக இந்த சனீஸ்வரர் கோயிலுக்கு வந்து தரிசித்து செல்லும் பக்தர்களின் வாழ்வில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது, மேலும் தொழில் தடை இருப்பவர்களின் தடைகள் நீங்கி தொழில் சிறக்கவும் சிறந்த இடமாக அமைந்துள்ளது. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

error: Content is protected !!