News April 8, 2025

ஏரியில் குளிக்கச் சென்ற சிறுவன் பலி !

image

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி ஏரியில் இன்று (ஏப்.8) தனது நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவன் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தார். சிறுவனின் நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். 

Similar News

News April 17, 2025

சேலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் !

image

சேலம்: தலைவாசல் அரிமா சங்கம், சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சேலம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து வருகிற ஏப்.27ஆம் தேதி காலை 8:00 மணி முதல் 1:00 மணி வரை தலைவாசல் மும்முடி யூனியன் ஆபீஸ் எதிரில் உள்ள அரிமா அரங்கத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க !

News April 17, 2025

சேலம்: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கவனத்திற்கு !

image

சேலத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். உதவித்தொகை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினைக் கொண்டு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலோ (அ) <>www.tnvelaivaaippu.gov.in <<>>விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

சேலம் மாணவிக்கு கத்திக்குத்து!

image

சேலத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த நபரை பிடித்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சேலம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் திருமால் கல்லூரி மாணவியிடம் மற்றும் மாணவியை கொலை செய்ய முயற்சித்த மோகன பிரியன் ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

error: Content is protected !!