News March 19, 2024

ஏப்.8ல் கொட்டகை முகூர்த்த விழா!

image

கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 8ம் தேதி காலை 9:00க்கு மேல் 9:45 மணிக்குள் மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் கொட்டகை முகூர்த்த விழா, ஆயிரம் பொன் சப்பரம் தலையலங்காரம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் மதியம் 2:00 மணிக்கு மேல் 3:00 மணிக்குள் வண்டியூர் வைகையாறு தேனுார் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்த விழா நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 14, 2026

மதுரை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

மதுரை மக்களே; இனி வரும் வெயில் காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 14, 2026

மதுரை: கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.!

image

மதுரை கோச்சடையை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் ரம்யா (19) தனியார் கல்லூரி ஒன்றில் 2 ஆம் ஆண்டு பிஎஸ்சி படித்து வந்தார். கடந்த சில நாட்களாக இவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கரிமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவி மரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

News February 14, 2026

மதுரை மாநகராட்சியில் குடிநீர் நிறுத்தம்!

image

மதுரை மாநகராட்சி முக்கிய இடங்களில், குடிநீர் பைப் லைன்களில் புதிய வால்வுகள் பொருத்தும் பணி நடைபெற இருப்பதால், வரும் பிப்.17 & பிப்.18. ஆகிய 2 நாட்களுக்கு, வைகை தென்கரை வார்டு எண்: 44 முதல் 70 வரையும், 76, 77, 85, 89 ஆகிய வார்டு பகுதிகளிலும் குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்த மாநகராட்சியின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. *SHARE பண்ணுங்க.

error: Content is protected !!