News February 10, 2026

ஏப்.19-ல் தமிழகத்திற்கு தேர்தலா?… அரசின் FACTCHECK

image

TN-ல் ஏப்.19-ம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதாக SM-ல் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், இது தற்போதைய அறிவிப்பு இல்லை எனவும், பழைய செய்தி இப்போது வைரலாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ECI துணை ஆணையர் <<19077197>>பானு பிரகாஷ் எத்துரு <<>>நாளை (பிப்.11) தமிழகம் வருகிறார். அவரது ஆய்வுக்கு பிறகு தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

Similar News

News February 11, 2026

கார்களின் விலை கணிசமாக குறைந்தது.. HAPPY NEWS

image

கார் வாங்க போறீங்களா? இந்த பிப்ரவரி மாதத்தில், <<19104598>>ஹோண்டாவை<<>> தொடர்ந்து ரெனால்ட் தனது Kwid, Triber, Kiger மாடல் கார்களுக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ₹73,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எந்தெந்த மாடல் கார்களுக்கு, எவ்வளவு சலுகை என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News February 11, 2026

ஆதரவாளர்கள் அதிருப்தி.. செங்கோட்டையனுக்கு அதிர்ச்சி

image

தவெகவில் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என செங்கோட்டையன் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Ex MP சத்தியபாமாவுக்கு மகளிர் அணியில் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதுவரை அவரது ஆதரவாளர்கள் யாருக்கும் கட்சியில் பொறுப்பு வழங்கவில்லை. இதனால், அவர்கள் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டுவதாக வெளியான தகவல் செங்கோட்டையனுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.

News February 11, 2026

கனிமொழி vs சபரீசன்.. திமுகவில் அதிகார போட்டியா?

image

தென் மாவட்ட தேர்தல் பொறுப்புகள் கனிமொழியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவர் அதை பரபரப்பாக செய்துவரும் நிலையில், சபரீசனும் அவரது வேலையில் தலையிடுவதாக கூறப்படுகிறது. தூத்துக்குடியில் திமுக நிர்வாகிகளை சந்தித்த சபரீசன் கள நிலவரங்களை கேட்டுள்ளாராம். ஏற்கெனவே இதுகுறித்த ரிப்போர்ட்டை கனிமொழி எடுத்த நிலையில், ஒரே வேலையை இருவர் செய்வதால் நிர்வாகிகள் குழப்பத்தில் இருப்பதாக பேசப்படுகிறது.

error: Content is protected !!