News April 7, 2025
ஏப்., 12ல் அரக்கோணத்தில் வேலைவாய்ப்பு முகாம்

அரக்கோணத்தில் அபிஷேக் அரசு மருத்துவமனை எதிரே வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜே.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ராணிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார மாவட்டத்தில் படித்து ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகள், செவிலியர்கள், கலைக் கல்லூரிகளில் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு ஏப்.12ம் தேதி காலை 8.30 மணி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
Similar News
News April 7, 2025
நாட்டின் முதல் காந்தி சிலை

ராணிப்பேட்டை முத்துக்கடை ஜங்சனில் வைக்கப்பட்ட காந்தி சிலை தான் நாட்டிலேயே காந்திக்கு வைக்கப்பட்ட முதல் சிலை. காந்தி இறந்த 13 நாட்களில் ஜெயராமன் செட்டியார் என்பரால் வைக்கப்பட்ட இந்த சிலை இன்று ராணிபேட்டை அரசு பள்ளியில் உள்ளது. உலகம் முழுவதும் காந்தியின் சில உள்ள நிலையில் முதல் காந்தி சிலையை நிறுவி பெருமை பெருமை பெற்றுள்ளது ராணிப்பேட்டை. ஷேர் பண்ணுங்க
News April 7, 2025
டவுன் போலீஸ் படையில் சேர விண்ணப்பிக்கலாம்

காவல் படைக்கு சேவை மனப்பான்மை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள 1,420 கிராம காவலர் பணியிடங்களை நிரப்ப ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆண்களுக்கு 11, பெண்களுக்கு 1 என மொத்தம் 12 காலியிடங்கள் உள்ளன. தகுதியானவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
News April 7, 2025
சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று வீடு திரும்பும் பொழுது கள்ளக்குறிச்சி அருகே விபத்து ஏற்பட்டதில் 10 பேர் பலியாகினர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்து தொடர் சிகிச்சையில் இருந்து வந்த மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சரவணன் (30) என்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.