News April 8, 2025
ஏப்.10-ல் இறைச்சிக் கடைகள் செயல்படாது!

“மஹாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 10- ஆம் தேதி அன்று சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு உத்தரவின்படி, இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்படக்கூடாது அன்றைய தினம் சிறப்பு குழுக்கள் 4 மண்டலங்களிலும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். விதியை மீறும் இறைச்சி கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை”- சேலம் மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை!
Similar News
News April 17, 2025
சேலம் மாணவிக்கு கத்திக்குத்து!

சேலத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த நபரை பிடித்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சேலம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் திருமால் கல்லூரி மாணவியிடம் மற்றும் மாணவியை கொலை செய்ய முயற்சித்த மோகன பிரியன் ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
News April 16, 2025
சேலம்: இன்றைய இரவு ரோந்து போலிசார் விவரம்!

சேலம் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாவட்ட கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
News April 16, 2025
அடுத்தடுத்து 3 கோயில்களில் பூட்டை உடைத்து திருட்டு

ஓமலூர் அருகே அடுத்தடுத்து 3 திருக்கோயில்களின் பூட்டை உடைத்து சுவாமிகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கத்தாலி, தங்க ஆபரணங்கள் மற்றும் உண்டியல் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற தீவட்டிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.