News April 2, 2024
ஏப்ரல் 5இல் அமித்ஷா குமரிக்கு வருகை

கன்னியாகுமரி மாவட்ட பாஜக அணி/பிரிவு மையக்குழு கூட்டமானது மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் நேற்று (ஏப்ரல் 1) மாலை மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டமன்ற வேட்பாளர் நந்தினி ஆகியோருக்கு வாக்கு சேகரிக்க ஏப்ரல் 5ஆம் தேதி தக்கலைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Similar News
News August 15, 2025
பாலமோரில் 22.4 மில்லி மீட்டர் மழை பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாலமோரில் 22.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குழித்துறையில் 21.2 மி.மீ, பேச்சிப்பாறை 19.8 மி.மீ, ஆனைக்கிடங்கு 17.2 மி.மீ, சுருளோடு 16.4 மி.மீ, திற்பரப்பு 14.8 மி.மீ, சிற்றாறு ஒன்று 14.4 மி.மீ, சிவலோகம் 14.2 மி.மீ, பெருஞ்சாணி 13.8 மி.மீ, புத்தன் அணை 11.2 மி.மீ, களியலில் 10.2 மி.மீ.மழை பதிவாகியுள்ளது.
News August 15, 2025
குமரி மாணவர்களே.. அரசின் 3 மாத இலவச AI பயிற்சி..!

தமிநாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவு(AI) துறையில் வேலைகளை பெறும் வகையில், 12 வாரங்கள் AI பயிற்சி மற்றும் சான்றிதழ் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் 12-ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடிவுத்தவர்கள் கலந்துகொள்ளலாம். வயது: 18 முதல் 35 வரை இருக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் இந்த <
News August 15, 2025
குமரியில் திருக்குறள் திருப்பணிகள் திட்டம் தொடக்கம்

குமரி மாவட்டத்தில் திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் மூலம் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மூன்று இடங்களில் நடைபெற உள்ளது. நாகர்கோவிலில் அமைந்துள்ள குறளகத்திலும், பொற்றையடியில் அமைந்துள்ள உலக திருக்குறள் சமுதாய மையம் , தோவாளையில் அமைந்துள்ள திருக்குறள் வாழ்வியல் பயிற்சி மையத்திலும் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.