News February 1, 2026
ஏப்ரல் 1-ல் புதிய வருமான வரிச்சட்டம் அமல்

புதிய வருமான வரிச்சட்டம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என பட்ஜெட்டில் அறிவிக்கபட்டுள்ளது. மேலும் வருமான வரி தாக்கல் செய்யப்படும் முறை எளிதாக்கப்படும் என்றும் ITR1, ITR 2 தாக்கலுக்கான அவகாசம் நீட்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாகன விபத்துக்கான இழப்பீட்டுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News February 6, 2026
காங்கிரஸ் MLA-க்களுக்கு செக் வைத்த திமுக?

11 காங்., MLA-க்கள் மீது டெல்லிக்கு ரகசிய ரிப்போர்ட்டை அறிவாலயம் கொடுத்துள்ளதாம். தொகுதியில் அவர்களது செயல்பாடுகள் மோசம் என்றும், அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டால் வெற்றிக்கு வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளதாம். சீட் தந்தால் வேறுதொகுதியில் போட்டியிட அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். திமுகவுடன் கூட்டணியை தொடர விரும்பிய தங்களுக்கே அறிவாலயம் செக் வைத்துவிட்டதாக காங்., MLA-க்கள் புலம்புகின்றனராம்.
News February 6, 2026
UPSC தேர்வில் அதிரடி மாற்றங்கள்

இந்தாண்டு UPSC தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது லைவ் போட்டோ எடுக்கப்படும்; அதோடு பதிவேற்றம் செய்த பாஸ்போர்ட் போட்டோ மேட்ச் ஆக வேண்டும். இது ஒத்துப்போகவில்லை என்றால் உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அதோடு IAS, IFS அதிகாரிகளாக பணியாற்றுவோர், மீண்டும் தேர்வெழுத விரும்பினால் பணியை ராஜினாமா செய்வது அவசியமாகும்.
News February 6, 2026
FLASH: சர்வதேச சந்தையில் தங்கம் விலை மேலும் சரிவு

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சமீபத்தில் வரலாறு காணாத புதிய உச்சமாக 1 அவுன்ஸ்(28g) $5,500-ஐ கடந்திருந்தது. இந்நிலையில், இன்று(பிப்.6) 1 அவுன்ஸ் $352 (இந்திய மதிப்பில் ₹31,790) சரிந்து $4,666-க்கு விற்பனையாகிறது. இதனால், இன்றைய தினம் இந்திய சந்தையிலும் தங்கம் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலையும் 1 அவுன்ஸ்(28g) $20 டாலர்கள் வரை குறைந்துள்ளது.


