News January 8, 2026
ஏப்ரல் 1-ல் தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு

மக்கள் தொகை 2 கட்டங்களாக நடைபெறும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக வீடுகளை கணக்கெடுக்கும் பணி ஏப்ரல் 1 தேதி தொடங்கப்பட உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு 30 நாள்கள் நடைபெற எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் 2-ம் கட்ட பணிகள் 2027 பிப்ரவரியில் தொடங்க உள்ளது. இதற்காக ₹11,718 கோடி பட்ஜெட்டை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
Similar News
News January 25, 2026
ஆண்களுக்கும் இந்த பீரியட்ஸ் பிரச்னை வருமா?

பெண்களுக்கு மாதவிடாய் போன்று, ஆண்களுக்கும் மாதந்தோறும் IMS (Irritable Male Syndrome) என்ற ஹார்மோன் பிரச்னை ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். 30 வயதை கடந்த நபர்களுக்கு இது பொதுவானதாக காணப்படுவதாக சொல்லப்படுகிறது. IMS-ன் போது, ஆண்கள் யாருடனும் அதிகம் பேச மாட்டார்களாம். எதற்கெடுத்தாலும் எரிச்சல், காரணமே இல்லாமல் கோபப்படுவதும் நடக்குமாம். நீங்களும் இதை ஃபீல் பண்ணியிருக்கீங்களா? கமெண்ட் பண்ணுங்க.
News January 25, 2026
ஆகப்பெரும் ஊழல்வாதி விஜய்: அதிமுக

விஜய்யின் விமர்சனத்திற்கு ‘பனையூர் பண்ணையார்’ என தலைப்பிட்டு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது. சட்டவிரோதமாக தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி என அதிமுக சாடியுள்ளது. மேலும், அன்றைய CM (ஜெ.,) வீட்டில் 5 மணி நேரம் கைகட்டி விஜய் காத்திருந்ததாகவும், கரூரில் 41 பேரின் மரணத்திற்கு நீங்களும் (விஜய்) ஒரு காரணம்தானே எனவும் கடுமையாக விமர்சித்துள்ளது.
News January 25, 2026
பிரபலம் காலமானார்.. பிரதமர் மோடி இரங்கல்

பத்ம பூஷண் விருது வென்ற மூத்த பத்திரிகையாளர் <<18955198>>மார்க் டல்லி<<>> மறைவுக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பத்திரிகை துறையின் முக்கிய குரலாக ஒலித்த டல்லி மறைவால் வருத்தமுற்று இருப்பதாக அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்தியாவுடனும் இந்திய மக்களுடனும் அவர் கொண்டிருந்த பிணைப்பு, அவரது படைப்புகளில் பிரதிபலித்ததாக குறிப்பிட்ட மோடி, டல்லியின் குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.


