News January 12, 2026
ஏனோ அந்த சந்தோஷமும், ஈர்ப்பும் இப்போது இல்லை!

சிறு வயதில் போகி பண்டிகைக்கு ஒரு ஸ்பெஷல் இடம் இருந்தது. விடிந்தும் விடியாத நேரத்தில், அரை தூக்கத்தில் மேளத்தை அடித்து, நெருப்பு முன் கொண்டாடி தீர்த்தோம். ஆனால், அந்த ஈர்ப்பும், குதூகலமும் தற்போது ஏனோ இல்லை. போகி கொண்டாடுவதே குறைந்துவிட்ட நிலையில், மேள சத்தமும், கூச்சல் கும்மாளமும் எப்படி கேட்கும். நண்பர்கள், சகோதர – சகோதரிகளுடன் ஜாலியாக மேளம் அடித்து கொண்டாடிய நினைவுகள் உங்களுக்கு இருக்கா?
Similar News
News January 25, 2026
பிரபலம் காலமானார்.. பிரதமர் மோடி இரங்கல்

பத்ம பூஷண் விருது வென்ற மூத்த பத்திரிகையாளர் <<18955198>>மார்க் டல்லி<<>> மறைவுக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பத்திரிகை துறையின் முக்கிய குரலாக ஒலித்த டல்லி மறைவால் வருத்தமுற்று இருப்பதாக அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்தியாவுடனும் இந்திய மக்களுடனும் அவர் கொண்டிருந்த பிணைப்பு, அவரது படைப்புகளில் பிரதிபலித்ததாக குறிப்பிட்ட மோடி, டல்லியின் குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
News January 25, 2026
கனமழை எச்சரிக்கை.. 12 மாவட்டங்களில் அலர்ட்

விடுமுறை நாளான இன்று, மக்களை வெளியே வரவிடாமல் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 10 மணி வரை செங்கை, காஞ்சி, சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவள்ளூர், திருவாரூர், தி.மலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை நீடிக்கும் என IMD கணித்துள்ளது. அதனால், இரவில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிருங்கள். பாதுகாப்பாக இருங்கள்!
News January 25, 2026
92 வயதில் 37 வயது பெண்ணை அம்மா ஆக்கினார்❤️❤️

92 வயதில் அப்பாவாகி உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஆஸி., டாக்டர் ஜான் லெவின். இவரின் மகன், தன் 65-வது வயதில் நோய் பாதித்து உயிரிழந்தார். இந்நிலையில் தங்களுக்கு ஒரு வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் ஆழ்ந்த லெவினும், அவரது 2-வது மனைவியான 37 வயது யான் யிங்கும் குழந்தை பெற முடிவெடுத்தனர். அதன்பின், IVF முறையில் முயற்சிக்க முதல் அட்டம்டிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.


