News January 6, 2025

ஏனாம் சென்றடைந்த புதுச்சேரி அமைச்சர்கள்

image

புதுச்சேரி மாநில ஏனாமில் 23 வது மலர் கண்காட்சி இன்று ஜி எம் சி பாலயோகி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக இன்று பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் அரசு கொறடா ஆறுமுகம் எம் எல் ஏக்கள் பாஸ்கர் லட்சுமி காந்தன் ஆகியோர் ஏனாம் சென்றடைந்தனர்.  புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்பு பிரதிநித மல்லாடி கிருஷ்ணாராவ் வரவேற்றார்.

Similar News

News January 7, 2025

முழு நிலை மருத்துவ படிப்பில் கட் ஆப் மதிப்பெண் குறைப்பு

image

புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது 2கட்ட கலந்தாய்வு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் காலி இடங்கள் அதிகமாக இருப்பதால் இந்திய மருத்துவ கவுன்சிலின் உத்தரவுப்படி நீட் கட் ஆப் மதிப்பெண் குறைக்கப்பட்டு உள்ளது.

News January 7, 2025

புதுவை: அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு

image

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்புகளில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

News January 7, 2025

எச்எம்பிவி பாதிப்பு பதிவாகவில்லை: அரசு அறிவிப்பு

image

புதுவை அரசு நலவழித்துறை தரப்பில் எச்எம்பிவி பாதிப்பு பற்றி நேற்று கூறுகையில் சீனாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) நோய் பரவுவது குறித்து இந்திய அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டது. இது மற்ற சுவாச வைரஸ் போன்றது, இது குளிர்காலத்தில் பொதுவான குளிர் & காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. புதுவை மாநிலத்தில் இதுவரை எச்எம்பிவி பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்று புதுவை அரசு தெரிவித்துள்ளது.