News December 30, 2025
ஏத்தாப்பூர் அருகே விபத்து!

செக்கடிப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன், 32.இவரது மனைவி பவித்ரா, 30. இருவரும் நேற்று டூ வீலரில் ஏத்தாப்பூர் நோக்கி சென்றனர். படையாட்சியூர் அருகே சென்றபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில், அன்பழகன் உயிரிழந்தார். பவித்ரா சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News December 31, 2025
சேலம்: ரூ.3 லட்சம் கடனில் 50% தள்ளுபடி!APPLY NOW

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News December 31, 2025
தாரமங்கலம் நபருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சேலம்: தாரமங்கலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நடராஜ் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தனி நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தநிலையில் விசாரணை நிறைவடைந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.இதில் குற்றவாளி நடராஜனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
News December 31, 2025
சேலம் மாநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில் புத்தாண்டு தினத்தன்று மாநகரம் முழுவதும் 650 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் 175 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் இளைஞர்களும் பொதுமக்களும் எவ்வித இடையூறும் இன்றி புத்தாண்டை கொண்டாட வேண்டும் வாகன சோதனை முழுமையாக நடைபெறுவதால் மது அருந்தி யாரும் வாகனங்களை இயக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.


