News November 23, 2025
ஏண்டா தவெகவை தொட்டோம் என ஃபீல் பண்ணுவீங்க: விஜய்

2026-ல் தவெக நிச்சயம் ஆட்சியமைக்கும் என்று விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறி வைத்தால் தவறாது; தவறும் என்றால் குறி வைக்க மாட்டேன் என்று எம்ஜிஆர் வசனத்தை சுட்டிக்காட்டினர். மேலும், இந்த எம்ஜிஆர் வசனம் யாருக்கு என்று புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என திமுகவை சீண்டிய அவர், ஏண்டா விஜய்யை தொட்டோம்; விஜய்யுடன் இருப்பவர்களை தொட்டோம் என நினைக்கும் நிலை வரும் என்றும் எச்சரித்தார்.
Similar News
News November 24, 2025
தலாய் லாமா 130 வயது வரை வாழ்வார்: திபெத்திய அமைப்பு

தலாய் லாமா உடல் நலத்துடன் உள்ளதாக மத்திய திபெத்திய நிர்வாக மூத்த தலைவர் பென்பா செரிங் கூறியுள்ளார். தற்போதைய தலாய் லாமா இறப்பை சீனா விரும்புவதாக கூறிய அவர், தலாய் லாமா இன்னும் 20 ஆண்டுகள் கூட வாழ்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த ஜூலையில் 90 வயதை அடைந்த தலாய், அடுத்த பெளத்த மதகுருவை (தலாய் லாமா) தேர்ந்தெடுக்கலாம் என அறிவித்தார். இதில் அரசும் தலையிடும் என சீனா அறிவித்தது.
News November 24, 2025
குஜராத்தில் காலடி வைத்த புலி PHOTOS

குஜராத் மாநிலத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக இளம் ராயல் பெங்கால் புலி காலடி வைத்துள்ளது. ரத்தன்மஹால் வனவிலங்கு சரணாலயத்தில் குடியேறியுள்ள புலி, மத்தியப் பிரதேசத்திலிருந்து இயற்கையாகவே இடம்பெயர்ந்திருக்கலாம் என்று வன அதிகாரிகள் நம்புகின்றனர். புலியின் போட்டோஸை மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News November 24, 2025
அயோத்தி ராமருக்காக விரதம் இருக்கும் PM மோடி

அயோத்தி ராமர் கோயிலில் 161 அடி உயர கொடி ஏற்றும் நிகழ்வு, நவ.25-ல் நடைபெறவுள்ளது. இதற்காக வருகை தரும் PM மோடி, அன்று காலை 11:50 மணிக்கு மேல் கொடியேற்றவுள்ளார். பின்னர், மகாதீபாராதனையில் பங்கேற்கும் அவர், சுவாமி தரிசனம் செய்வார். இவ்வாறு கொடி ஏற்றுகையில், மோடி விரதத்தில் இருப்பார் என ராமர் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர், மனிதநேயம் பற்றி உரையாற்றுவாராம்.


