News January 31, 2025
ஏசி வெடித்ததில் பெண் உயிரிழப்பு

செங்கல்பட்டு அடுத்த ஜமீன் பல்லாவரம் பகுதியில் உள்ள வீட்டில், நள்ளிரவில் ஏசி வெடித்ததில் பேராசியர் தனலஷ்மி (44) என்பவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திடீரென சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று கதவை உடைத்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 30, 2025
செங்கல்பட்டு: B.E.,MBA போதும்.. ரூ.30,000 சம்பளம்

ஆவடியை தலைமை இடமாககொண்டு ராணுவ வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனம் செயல்படுகிறது. அங்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு B.E., MBA முடித்தவர்கள் இங்கு <
News September 30, 2025
செங்கல்பட்டு: Whats App மூலம் ஆதார் அட்டை

செங்கல்பட்டு மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை+9013151515 சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக “HAI” என SMS அனுப்பினால் போதும். அதுவே ஆதார் அட்டையை பெற வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News September 30, 2025
செங்கல்பட்டு: ரயில்வேயில் வேலை.. ரூ.35,400 சம்பளம்

செங்கல்பட்டு மக்களே, இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசையா? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <