News January 5, 2026
ஏசி மின் ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்

சென்னை: மின்சார ரயில் இயக்கம் மற்றும் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு, சென்னை – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் ஏசி மின்சார ரயில்களின் சேவையில் ஜன.5-ம் தேதி முதல் சில மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. இதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்ல வேண்டிய ஏசி மின்சார ரயில், இனி மாலை 3.47 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
Similar News
News January 28, 2026
சென்னை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
News January 28, 2026
4,000 கோயில்களுக்கு குடமுழுக்கு – முதல்வர்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், ’திமுக ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இன்று பெரம்பூர் சேமாத்தம்மன் கோயிலில் 4,000-வது குடமுழுக்கு விழா நடைபெற்றது. தமிழ்நாட்டில் மதவாத அரசியல் செய்வோருக்கு இடமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News January 28, 2026
சென்னை ஒன் செயலி: 40லட்சம் டிக்கெட் விற்பனை

சென்னை ஒன் செயலி மூலம் இதுவரை 40லட்சம் டிக்கெட்டுகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ரயில், மெட்ரோ, பேருந்து போக்குவரத்தை ஒன்றாக இணைக்கும் வகையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ‘சென்னை ஒன்’ செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் இந்த செயலி மூலம் 40லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


