News June 26, 2024
எஸ்.பி. தலைமையில் போலீசார் உறுதிமொழி ஏற்பு

உலக போதை ஒழிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.இதையொட்டி கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி.இராஜாராம் தலைமையில் போலீசார் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.இதில் டி.எஸ்.பி.க்கள் சௌமியா, நாகராஜன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில் விநாயகம், காவல் ஆய்வாளர் பரமேஸ்வர பத்மநாபன், தனிபிரிவு உதவி ஆய்வாளர் முகமது நிசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 18, 2025
கடலூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
8. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
News December 18, 2025
கடலூர்: வேளாண் கூட்டுறவு சங்கத்தில் வேலை

தென்னிந்திய பல மாநில வேளாண் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (SIMCO)-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 52
3. வயது: 21 – 41
4. சம்பளம்: ரூ.5,200 – ரூ.28,200
5. கல்வித் தகுதி: 10th, 12th, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 20.01.2026
7. மேலும் அறிந்துகொள்ள: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 18, 2025
கடலூர்: ஷேர் ஆட்டோ அச்சு முறிந்து விபத்து

கடலூர் பழைய கலெக்டர் அலுவலக சாலையில் நேற்று சென்ற ஷேர் ஆட்டோ ஒன்று அங்குள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய போது திடீரென முன்பக்க டயரின் அச்சு முறிந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் இருந்த 3 பெண்கள் உள்பட 5 பேர் லேசான காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


