News July 24, 2024
எஸ் பி தலைமையில் உயர் அதிகாரிகள் சிறப்பு கலந்தாய்வு

திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் உட்கோட்டம் மற்றும் சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்களுடன் சிறப்பு கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் விசாரணை முடிவடையாமல் நிலுவையில் உள்ள வழக்குகள் மாற்று நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தும், சட்டவிரோத செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Similar News
News April 5, 2026
திருவாரூர்: பைக் மீது மோதிய கார் – துடிதுடித்து இளைஞர் பலி

மன்னார்க்குடியை சேர்ந்தவர் நிஷாந்த்(35). இவரும் இவரது நண்பர் பாலசுந்தரம்(40) என்பவரும் நேற்று வேளாங்கண்ணியில் இருந்து நாகை நோக்கி பைக்கில் சென்றபோது, பரவை அருகே பைக் மீது எதிரே வந்த கார் மோதியதாக கூறப்படுகிறது. இதில் நிஷாந்த் தூக்கி வீசப்பட்டு சம்பவயிடத்திலே உயிரிழந்தார். பாலசுந்தரம் படுகாயத்துடன் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுதிக்கப்பட்டார். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News April 5, 2026
திருவாரூர்: பைக் மோதி ஓய்வு பெற்ற நூலகர் பலி

முத்துப்பேட்டை செம்படவன்காடு கிழக்கு கடற்கரை சாலையில் ஓய்வு பெற்ற மாவட்ட நூலகர் கனகசபை (71) நடந்து சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக இரு சிறுவர்கள் ஒட்டி சென்ற பைக் மோதி படுகாயம் அடைந்தார். இந்நிலையில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.