News March 20, 2024

எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். அதன்படி இன்று கூட்டம் நடைபெற்றது. இதில் மொத்தமாக 32 மனுதாரர்களிடமிருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டு அவை அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டது. இதில் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமை வகித்தார்.

Similar News

News October 25, 2025

திருச்செந்தூருக்கு 220 அரசு சிறப்பு பேருந்துகள்

image

திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்.27 அன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நெல்லை கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 220 அரசு சிறப்பு பேருந்துகள் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இருந்து இயக்கப்பட உள்ளன. அக்.26 அன்று பிற்பகலில் இருந்து அக்.28 காலை வரை இந்த பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 25, 2025

தூத்துக்குடியில் இரவு ஹலோ போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News October 24, 2025

தூத்துக்குடி: குறைந்த விலையில் வீடு வேண்டுமா?

image

தூத்துக்குடி மக்களே, சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது வாழ்க்கை கனவாக உள்ளது. ஆனால், கடும் விலை உயர்வால், அது பலருக்கு எட்டாத கனியாகவே உள்ளது. இதை மாற்ற தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடு வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!