News April 24, 2025
எஸ்.ஐ. வேலைக்கு இலவச பயிற்சி

1,299 சார்பு ஆய்வாளர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், இத்தேர்வுக்கான இலவச பயிற்சி நாளை மறுநாள் (ஏப்ரல் 26) முதல் தொடங்க உள்ளது. பயிற்சி வகுப்பு சனி, ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 – மாலை 4:00 மணி வரை நடைபெறும். இப்பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளோர், 96264 56509, 63815 52624 என்ற மொபைல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News September 17, 2025
திருவள்ளூர்: தலைகுப்புற கவிழ்ந்து டிராக்டர் விபத்து

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே பேட்டை அடுத்த பைவலசா கிராமத்தில் கல்லூரி வாகனம் பழுதாகி இருந்தது. இதனை டிராக்டர் மூலம் கட்டி இழுத்தனர். அவ்வாறு இழுக்கும் போது டிராக்டரில் கட்டி இருந்த கயிறு அறுந்ததால் டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் டிராக்டர் மட்டுமே தலைவியாக கவிழ்ந்தது.
News September 17, 2025
திருவள்ளூரில் மழை- மின்தடையா கவலை வேண்டாம்!

திருவள்ளூரில் மழை பெய்வதால், அடிக்கடி மின்வெட்டும் ஏற்படும். அவ்வாறு, முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் (9498794987) எண்ணை தொடர்வு கொள்ளவும். ஒருவேளை லைன் கிடைக்கவில்லை அல்லது பிசியாக இருந்தால், 9444371912 என்ற திருவள்ளூர் மாவட்ட வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ <
News September 17, 2025
திருவள்ளூர்: வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு

திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில், வரும் 19ம் தேதி 25-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.