News April 22, 2025

எஸ்.ஐ. கனவை நனவாக்குங்கள் சேலத்தில் இலவச பயிற்சி!

image

காவல் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, சேலம் ஏற்காடு பிரதான சாலை கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 29.04.2025 அன்று காலை 10.00 மணி அளவில் துவங்கப்படவுள்ளது. இப்பயிற்சி தொடர்பான விவரங்களை 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.(ஷேர் செய்யுங்கள்)

Similar News

News April 22, 2025

சேலத்தில் வேலை வாய்ப்பு முகாம்!

image

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 8ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம். இந்த முகாமானது ஏப்.25- ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கோரிமேடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

News April 22, 2025

ஏப்.25- ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

image

சேலம் மாவட்டத்தில் ஏப்ரல் 2025 மாதத்திய விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 25.04.2025, வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக இரண்டாம் தள கூட்ட அறை எண் 215-ல் நடைபெற உள்ளது.
விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்க பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு வேளாண்மை சம்மந்தமான தங்கள் குறைகளை நேரிலும் விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என ஆட்சியர் அறிவிப்பு!

News April 22, 2025

எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

image

சேலம் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.04.2025 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 03.00 மணிக்கு நடைபெற உள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்கள் இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீர்வு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

error: Content is protected !!