News July 24, 2024
எஸ்பி தலைமையில் குறைதீர் கூட்டம்

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று (ஜூலை24) நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் 25 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் அந்தந்த காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். கூட்டத்தில் ஏடிஎஸ்பி பாஸ்கரன் உட்பட காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News April 8, 2026
அறிவித்தார் வேலூர் கலெக்டர்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் வரும் 21-ம் தேதி முதல் வாக்குப்பதிவு நாளான 23-ம் தேதி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே-4ம் தேதியும் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News April 8, 2026
வேலூரில் கொடூரத்தின் உச்சம்!

ஒடுகத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத 51 வயது பெண் வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அத்திக்குப்பம் புதுமனை தெருவை சேர்ந்த தர்ஷன் (21) என்பவரை வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று தர்ஷனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
News April 8, 2026
வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.7) இரவு முதல் இன்று (ஏப்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


