News October 28, 2024
எஸ்பி தலைமையில் ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் தென்காசி மாவட்ட எஸ்பி ஸ்ரீனிவாசன் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், காவல் ஆளினர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள், “ஊழலை தடுக்கும் பொருட்டு அனைத்து செயல்களிலும் நேர்மையையும் சட்ட விதிகளையும் பின்பற்றுவேன், லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன்” என உறுதிமொழி ஏற்றனர்.
Similar News
News October 3, 2025
தென்காசி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். Share பண்ணுங்க..
News October 3, 2025
தென்காசி: கள்ளகாதல் விவகாரம்: ஒருவர் கொலை!

தென்காசி, ஆழ்வார்குறிச்சி அருகே கணேசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆரம்பத்தில் இறந்தது வாகன விபத்தாக கருதபட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. விசாரணையில், கணேசனுக்கு ஒரு பெண்ணுடன் இருந்த கள்ளக்காதல் காரணமாக, ஆத்திரமடைந்த அப்பெண்ணின் குடும்பத்தினர் அவரைத் தாக்கி கொன்று, விபத்து போல நாடகமாடியது அம்பலமானது. இது தொடர்பாக போலீசார் 4 பேர் கைது.
News October 3, 2025
தென்காசி: அக்.4 மின்தடை – உங்க ஏரியா இருக்கான்னு பாருங்க!

தென்காசி, செங்கோட்டை உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் அக்.4ல் நடைபெறவுள்ளது. இதனால் தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, இலஞ்சி. குத்துக்கல்வலசை, ஆயிரப்பேரி, இலத்தூர், மத்தளம்பாறை, மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கபிள்ளைவலசை, பளியரை, வல்லம், தெற்குமேடு, பூலாங்குடியிருப்பு கட்டளை குடியிருப்பு பகுதியில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.