News February 5, 2025

எஸ்பி அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம்

image

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (05.02.25 ) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், மனு கொடுக்க வந்த பொதுமக்களிடமிருந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா, 34 மனுக்களை பெற்று மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அப்போது, மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Similar News

News November 12, 2025

கரூர்: ராஜவாய்க்காலில் தவறி விழுந்து ஒருவர் பலி!

image

கரூர் மாவட்டம் வாங்கல் அருகே நேதாஜி நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி சுதாகர் (55), ராஜவாய்க்கால் தடுப்பு சுவரில் அமர்ந்திருந்தபோது தவறி விழுந்து தலையில் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மனைவி அமுதா கொடுத்த புகாரின் பேரில் வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 11, 2025

கரூர்: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News November 11, 2025

கரூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

கரூர் மாவட்டத்தில் (நவம்பர் 14) அன்று “உழவரை தேடி” வேளாண் திட்ட முகாம்கள் 8 இடங்களில் நடைபெறும் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். கரூர், தான்தோன்றிமலை, அரவக்குறிச்சி, மத்தி வட்டங்களில் உள்ள கிராமங்களில் நடைபெறும் இந்த முகாம்களில் நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், பயிர்க்கடன், அரசு உதவித் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!