News August 14, 2024

எஸ்எம்எஸ் பார்த்து ஏமாறாதீர்கள் – அலர்ட்

image

திருச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கற்பகசெல்வி கூறுகையில், மின் நுகர்வோரின் கைப்பேசி எண்ணுக்கு மின் கட்டண பாக்கி தொடர்பாக அனுப்பப்படும் குறுஞ் செய்திக்கு கீழ் TANGEDCO வங்கி கணக்கு எண் மட்டுமே அனுப்பப்படும். தனிநபரின் வங்கி கணக்கு எண்ணோ அல்லது செல்போன் நம்பரோ அனுப்புவது நடைமுறையில் இல்லை. இதுபோன்ற போலியான எஸ்.எம்.எஸ்.தகவல்களை பார்த்து நுகர்வோர்கள் பணத்தை இழக்க வேண்டாம் என எச்சரித்துள்ளார்.

Similar News

News December 9, 2025

திருச்சி: SBI வங்கியில் வேலை.. தேர்வு இல்லை!

image

திருச்சி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <>இங்கு க்ளிக் <<>>செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.51,000 வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News December 9, 2025

திருச்சி: வாகன பொது ஏலம் அறிவிப்பு

image

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தலின் பேரில், போதை பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 25 டூவீலர்கள், 4 நான்கு சக்கர வாகனங்கள் நாளை (டிச.10) காலை 10 மணிக்கு மாநகர ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் இன்று (டிச.9) மாலை 5 மணி வரை, மாநகர ஆயுதப்படை வளாகத்தில் வாகனங்களை பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 9, 2025

திருச்சி: ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

image

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத் நாளை (டிச.10) திருச்சி வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படையினர், மோப்பநாய் உதவியுடன் பயணிகளின் உடைமைகள், பார்க்கிங் மற்றும் பார்சல் அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!