News January 10, 2026
எவ்வாறு ஓய்வூதியம் (TAPS) வழங்கப்படும்?

தமிழக அரசு ஊழியர்களாக 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு <<18819131>>TAPS <<>>வழங்கப்படும். ஓய்வூதியதாரர்கள் இறந்துவிட்டால், அவர்கள் பெற்று வந்த ஓய்வூதியத்தில் இருந்து 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். அரசு அலுவலர்கள் பணி ஓய்வுபெறும் போதோ, பணி காலத்தில் இறக்க நேரிட்டாலோ ₹25 லட்சம் பணிக்கொடை வழங்கப்படும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த ஓய்வூதிய நிதியத்துக்கு அரசு ₹13,000 கோடி நிதி வழங்குகிறது.
Similar News
News January 28, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 28, தை 14 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: தசமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News January 28, 2026
மூன்று பக்கமும் முட்டி மோதும் OPS

தனது ஆதரவாளர்கள் பலரும், ஒவ்வொரு கட்சியில் தஞ்சம் அடைந்துவிட்ட நிலையில் OPS தற்போது புது ரூட்டை பிடித்துள்ளார். திமுகவிடம் தான் கைகாட்டும் 5 பேருக்கு சீட் கொடுங்க என்றும், தவெகவிடம் எனக்கு கட்சி பொறுப்பை தாண்டி பெரிய இடம் வேண்டும் என்றும் கேட்டுள்ளராம். இதுபோக, NDA பக்கம் சாய்ந்த TTV-யிடம், 3 பேருக்கு மட்டும் சீட் கொடுங்க, நாங்க குக்கர் சின்னத்துலேயே நிற்கிறோம் என்று தகவல் கொடுத்துள்ளராம்.
News January 28, 2026
பகீர் குற்றச்சாட்டை மறுத்த வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்பில் பகிரப்படும் தனிப்பட்ட தகவல்கள் மெட்டா நிறுவனத்தால் படிக்கப்படுவதாக US-ல் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் அதனை மறுத்துள்ளது. ஒரு மொபைலில் இருந்து பகிரப்படும் ஒவ்வொரு தகவலும் குறியாக்கம் செய்யப்படுகின்றன என்றும், நீங்கள் யாருக்கு அனுப்பினீர்களோ, அவர்களால் மட்டுமே அவற்றைப் படிக்க முடியும். மெட்டா நிறுவனத்தால் அவற்றை அணுக முடியாது எனவும் தெரிவித்துள்ளது.


