News March 21, 2026
எவ்வளவு நேரம் போன் யூஸ் பண்ணீங்க என தெரியணுமா?

ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் போன் பயன்படுத்துகிறோம் என தெரிந்துகொள்ள வேண்டுமா? உங்களுடையது ஆண்ட்ராய்டு போன் என்றால், Settings-ல் Digital Wellbeing & Parenting Option-க்கு செல்லுங்கள். எந்த ஆப்பில் அதிக நேரம் செலவிட்டுள்ளீர்கள் என்பது தெரிந்துவிடும் *Iphone-களில் Screen Time app & the Attentive app என்ற ஆப்ஷனில் இதனை தெரிந்து கொள்ளலாம். அனைத்து நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News April 10, 2026
விஜய்யால் உதயநிதியின் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு

கடலூரில் பிரசாரம் செய்ய நாளை விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டதால், உதயநிதிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாளை கடலூரில் பிரசாரம் செய்ய உதயநிதியும் திட்டமிட்டிருந்த நிலையில், தவெக தரப்பு முன்பே விண்ணப்பித்ததால், விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, கடலூரில் உதயநிதியின் பிரசாரம் வேறொரு நாளுக்கு மாற்றப்படவுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News April 10, 2026
‘இளம் பெண்களுக்கு நடிகர் மீது ஆசை’ அமைச்சர் சர்ச்சை பேச்சு

இளைஞர்கள் நடிகை மீது ஆசை வைத்துள்ளது போல், இளம்பெண்கள் நடிகர் மீது ஆசை வைத்துள்ளனர் என அமைச்சர் அன்பரசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நடிகர் யார் என்று தன்னால் வெளிப்படையாக சொல்ல முடியாது எனக்கூறிய அவர், இளம்பெண்களின் ஓட்டு மாறிவிடாமல் இருக்க, திமுகவை சேர்ந்த பெண் நிர்வாகிகள், வீடு வீடாக சென்று அவர்களிடம் பேச வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News April 10, 2026
குழந்தைகளை பிரசாரத்தில் ஈடுபடுத்திய ஆதவ்

தேர்தல் விதிகளை மீறி ஆதவ் அர்ஜுனா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். வில்லிவாக்கம் தொகுதியில் நடந்த ஆதவ் பிரசாரத்தில் தவெக சின்னம் இருக்கும் சட்டை, கையில் விசில், கட்சி துண்டுகளுடன் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒரு கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளரே விதிகளை மீறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>


