News February 17, 2025
எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்
Similar News
News March 5, 2026
விழுப்புரம் அருகே பெண் தற்கொலை!

அனந்தபுரம் அருகே உள்ள பனமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன். இவரது மனைவி ஜெயா(30). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த ஜெயா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஜெயாவின் தந்தை ஏழுமலை அளித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 5, 2026
விழுப்புரம்: சனி பெயர்ச்சி விழா.. சிறப்பு ரயில் இயக்கம்

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சியை ஒட்டி அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் மார்ச் 6, 7 தேதிகளில் விழுப்புரம்-நாகை இடையே சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் விழுப்புரத்தில் இருந்து காலை 9: 10 மணிக்கு புறப்பட்டு பகல்1:05 மணிக்கு நாகை சென்றடையும். மறு மார்க்கத்தில் பகல் 1:20 மணிக்கு புறப்பட்டு மாலை 5:30 மணிக்கு விழுப்புரம் செல்கின்றது.
News March 5, 2026
விழுப்புரம்: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

விழுப்புரம் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <


