News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

Similar News

News August 22, 2025

சென்னை தினம்: CM ஸ்டாலின் வாழ்த்து

image

சென்னை தினத்தையொட்டி CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள X பதிவில், எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து, மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386 என பதிவிட்டுள்ளார்.

News August 22, 2025

திடீரென ஸ்தம்பித்த GST சாலை

image

சென்னை, பல்லாவரம் மேம்பாலத் தடுப்புகளில் கல்லூரி பேருந்து மோதியதால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பல்லாவரம் மேம்பாலம் தற்காலிகமாக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு, பல்லாவரத்தில் இருந்து விமான நிலையம் செல்லும் மார்க்கத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் தாம்பரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் கீழே மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.

News August 22, 2025

BREAKING: சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

image

சென்னையில் இன்று (ஆக.22) அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கு மழை நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமான என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்றும் வழக்கம் போல் இயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!