News December 27, 2025
எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு

கோவை, நீலகிரியில் பறவைக் காய்ச்சல் பீதியால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், வாத்துகள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்தன. அவற்றின் ரத்த மாதிரிகளைப் பரிசோதித்ததில் பறவை காய்ச்சல் பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டது.
Similar News
News December 28, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (28.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 28, 2025
கோவை: அரசு மருத்துவமனை தொடர்பு எண்கள்

1) கோவை அரசு தலைமை மருத்துவமனை – 0422-2301393.
2) சிங்காநல்லூர் அரசு இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை – 0422-2574391.
3) மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை – 04254-222027.
4) பொள்ளாச்சி அரசு மருத்துவமனை – 04259-229322.
5) வால்பாறை அரசு மருத்துவமனை – 04253-222533.
மிக முக்கிய தொடர்பு எண்களான இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News December 28, 2025
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம்

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நரசிம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாம் தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிராபகரன் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


